"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சரவை குறித்து வரும் செய்திகள் அமைச்சர்கள் மத்தியிலேயே பரபரப்பை உண்டாக்கி இருக்கு.''”

Advertisment

"நியமனம், நீக்கம், மாற்றம் என்றெல்லாம் பேச்சு அடிபடும் போது பரபரப்பும் பதட்டமும் இருக்கத்தானே செய்யும்?''”

"உண்மைதாங்க தலைவரே, அமைச்சரவை மாற்றம்ங்கிற செய்தி வரத்தொடங்கியதில் இருந்தே அமைச்சர்கள் தரப்பில் பல்வேறு உணர்ச்சி அலைகளைப் பார்க்க முடியுது. அண்மைக் காலத்தில் சர்ச்சையில் சிக்கிய ஒரு சில அமைச்சர்கள், தங்கள் பதவிக்கு ஆபத்து வருமோங்கிற பதட் டத்தில் இருக்காங்க. அதேபோல், துறையில் புகார்களை சம்பாதித்திருக்கும் அமைச்சர் களும், டம்மியான துறைகளுக்கு நாம் மாற்றப்படுவோமோ என்கிற கவலையில் கை பிசைகிறார்கள். இப்படிப்பட்ட அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினின் மூடு குறித்து விசாரித்து வருகிறார்களாம். அதேபோல், தங்களுக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காமல் பரிதவிக்கும் சில அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலினையே அணுகி தங்களுக்கு நீதிகேட்டு முறையிட்டிருக்கிறார்கள்.''

"அப்படி ஏடாகூட அதிகாரிகள் பற்றி முதல்வரிடம் முறையிட்ட அமைச்சர்கள் யார் யார்?''”

Advertisment

rr

"குறிப்பா மூன்று அமைச்சர்கள் இந்த வகையில் முதல்வரை சந்தித்திருக்கிறார்கள். அதாவது, முத்துச்சாமி, அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ் ஆகியோர்தான் அந்த மூன்று அமைச்சர்கள். இந்த அமைச்சர்களுக்கும் அவர் கள் துறையில் செயலாளர்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் ஏழாம் பொருத்த மாகவே இருந்து வருது. குறிப்பாக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கும், அத்துறையின் செயலாளராக இருந்த ஹித்தேஷ் குமார் மக்வானாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே டேர்ம்ஸ் சரியில்லை. மக்வானா, அமைச்சரை சுத்தமாக மதிக்கவே இல்லையாம். இந்த நிலை யில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முத்துச்சாமி, எனக்குத் தெரியாமல் பல முடிவுகளை செக்ரட் டரி மக்வானா எடுக் கிறார். அதனால் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகும் நிலை வருமோன்னு பயமா இருக்குன்னு அவர் மனம்விட்டுப் பேசி இருக்கிறார்.''”

"அதனால்தான் நடவடிக்கைக்குப் பயந்து மக்வானா டெல்லிக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கிட்டுப் பறந்துட்டாரா?''”

"ஆமாங்க தலைவரே, இந்த விவகாரத்தை விசாரித்து மக்வானாவின் தெனாவெட்டுப் போக்கைத் தெரிந்துகொண்ட ஸ்டாலின், அவரை டெல்லிப் பணிக்கு அனுப்பிவச்சிட்டு, வீட்டுவசதித் துறையின் செயலாளராக அபூர்வா ஐ.ஏ.எஸ்.ஸை நியமிச்சிருக்கார். அதேபோல, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் அந்தத் துறையின் ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் ஒத்துப்போக வில்லை. அதனால் இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த அன்பில் மகேஷ், "ஆணை யர் நந்தகுமார் எந்த விசயத்துக்கும் ஒத்து ழைப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ். சிந்த னையாளரான அவரை, எனது துறையிலிருந்து மாற்றிவிடுங்கள் அல் லது என்னை மாற்றி விடுங்கள்'னு கோரிக்கை வைத்திருக்கிறார். அவரை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லி சமாதானப்படுத்தி னாராம் ஸ்டாலின்.''”

"அமைச்சர் மனோதங்கராஜ் விவகாரம்?''”

"தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோதங்க ராஜுக்கும் துறையின் செயலாளர் நீரஜ் மிட்டலுக்கும் கூட பனிப்போர் நடந்துக் கிட்டு இருந்தது. சமீபத்தில், செட்டாப் பாக்ஸ் ஊழல் விவகாரத்தில் நீரஜ் மிட்டலும், அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநரான ஜெயசீலனும்தான் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர். இது குறித்து, முதல்வரிடம் அமைச்சருக்கு எதிரான பொய்த் தகவல்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கு. இந்த நிலையில், முதல்வரை சந்தித்த மனோதங்கராஜ், "துறையில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் நீரஜ் மிட்டலும் ஜெயசீலனும்தான் காரணம். உண்மைகள் உங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். என்னை ஒரு அமைச்சராக அவர்கள் மதிக்கவில்லை'ன்னு கலக்கத்தோடு சொல்லி இருக்கிறார்.''

"பிறகு?''”

"கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து ஜெயசீலனை விடுவித்த முதல்வர் ஸ்டாலின், துறைச் செயலாளர் நீரஜ் மிட்டலை விட்டு வச்சிருக்கார். மனோ தங்கராஜையும் கொஞ்சநாள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டா லின். அதனால் இந்த மூன்று அமைச்சர்களுக் கும் இலாகா மாற்றங்கள் இருக்கலாம்னு கோட்டை வட்டாரத்தில் டாக் அடிபடுது. அதேபோல் தங்கள் சீனியாரிட்டிக்கு ஏற்ற துறை வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கும் சில சீனியர் அமைச்சர்களின் மனக்குறையை நீக்கும் வகையில், அமைச்சரவை மாற்றத்தின் போது இலாகா மாற்றம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுது.''”

"சரிப்பா, பெரும் சேதம் ஏற்படாமல் மாண்டஸ் புயலை சமாளித்து சென்னை மக்களிடமும் நல்ல பெயர் வாங்கி இருக்கிறதே தி.மு.க. அரசு?''”

"உண்மைதாங்க தலைவரே, சில மாதங் களுக்கு முன்னதாகவே மழை நீர் வடிகால்களை எல்லாம் கவனித்து சரிசெய்துவிட்டதால், பெரிய அளவுக்கு சென்னை பகுதியில் மழை, புயல் நேரத்தில் தண்ணீர் தேங்கலை. புயல் நேரத்திலும் கூட எதையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி அதிகாரிகள் களத்தில் நின்றதைப் பார்க்கமுடிந்தது. முதல்வர் ஸ்டாலினும் சென்னை பகுதிகளைப் பார்வையிட்டதோடு, சற்றும் தாமதிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். புயல் கரையை கடந்த வெள்ளிக் கிழமை அன்று, விடிய விடிய அவர் விழித் திருந்து கண்காணித்ததோடு, அமைச்சர்களும், அதிகாரி களும்கூட செயல்படும்படி பார்த்துக்கிட்டார். இப்படி எல்லா வகையிலும் போர்க்கால நடவடிக் கைகள் எடுக்கப்பட்ட தால் மாண்டஸ் புய லால் தமிழகத்துக்கு ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கு.''”

"மழை நிவாரணப் பணிகளைப் பார்வையிட்ட முதல்வரின் கான்வாயில், சென்னை மேயர் ப்ரியா ஃபுட் போர்டில் தொற்றிக் கொண்டு வந்தது சர்ச் சையை ஏற்படுத்தியதே?''”

rr

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, வட சென்னையில் இருக்கும் காசிமேடு பகுதிகளைப் பார்வையிட முதல்வர் சென்றபோது, அவரது வாகனத்துக்கு முன்பாக சென்ற பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனத்தில், சென்னை மேயர் ப்ரியாவும், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியும் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு சென்ற னர். மேயர் பதவி என்பது மிகவும் மரியாதைக்குரியது. ப்ரோட்டோகால் படி முதல்வருக்கு அடுத்த பொறுப் புள்ள, மரியாதைக்குரிய பதவி அது. அப்படிப்பட்ட பதவியில் இருப்பவர், வாக னத்தில் தொங்கிச் சென்றது எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி இருக்கு. இது குறித்து விசாரிக்கையில், காசிமேடு மீன்பிடி துறை முகப் பகுதி குறுகலான பாதை என்பதால், முதல்வரின் கான்வாய் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்றும், அங்கிருந்து திரும்பும்போது, புயல் நிவாரணப் பணிகளை விரைந்து பார்வையிடும் பொருட்டு மேயரும், மாநகராட்சி ஆணையரும் முதல்வரின் கான் வாயில் ஏறிநின்று வந்ததாகவும் விளக்கமளித் தார்கள். அதற்குள் அரசியலாக்கப்பட்டுவிட்டது.''

"குஜராத் பா.ஜ.க. அமைச்சரவையின் பதவி ஏற்பு விழாவுக்கு அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ். மட்டும் கலந்துகொண்டிருக்கிறாரே?''

"ஆமாங்க தலைவரே, ஜி-20 மாநாட்டுக் கான ஆலோசனைக் கூட்டத்துக்கு அ.தி.மு.க. வின் இடைக்காலப் பொதுச்செயலாளர்னு குறிப்பிட்டு பா.ஜ.க. தரப்பில் இருந்து எடப்பாடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டதில் அப்செட்டான ஓ.பி.எஸ்., இது சம்பந்தமா டெல்லியிடம் மூக்கைச் சிந்தினார். அதனால் அவரையும் கூல்பண்ணும் வகையில், குஜராத் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு அ.தி.மு.க. சைடில் இருந்து எடப்பாடியையும், ஓ.பி.எஸ். ஸையும் அழைத்திருந்தது பா.ஜ.க. இதனால் குஷியோடு குஜராத்துக்குப் பறந்த ஓ.பி.எஸ்., அங்கே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா ஆகிய மூவரையும் தனித்தனியே சந்திச்சிப் பேசணும்கிற திட்டத்தோடு இருந்தார். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கலைன்னு சொல்லப்படுது. ஓ.பி.எஸ்.ஸுக்கும் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டது தெரிந்ததுமே, அப்செட்டான எடப்பாடியோ, குஜராத் செல்லாமல் புறக்கணித்துவிட்டாராம்.''

"ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்த -ல் பா.ஜ.க. தனிச்சி நிக்கப்போகுதுன்னு, அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி இருக்காரே?''”

ops

"ஆமாங்க தலைவரே, ஜி-20 ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி போயிருந்த பா.ஜ.க. அண்ணாமலை, திரும்பி வந்த சூட்டோடு கட்சியின் மாநில நிர்வாகிகள் மற் றும் மாவட்ட தலைவர்களுடன் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனிச்சிதான் போட்டியிடப்போவுது. நாம, இருக்குற சீட்டுகளை எல்லாம் கூட்டணிக் கட்சிகள்ட்ட பங்கு பிரிச்சிக் கொடுத்துட்டு, வெறும் 4 சீட், 5 சீட்ல போட்டியிடுற கதையெல்லாம் இனி இருக்காது. தனிச்சி நின்னு நம் பலத்தைக் காட்டப்போறோம். அதற்கேற்ப இந்த 1 வருசத்தை நாம் பயன்படுத்திக்கணும். இதை மோடிஜியிடமே நான் சொல்லிவிட்டேன். அதனால், இப்போதிலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும். இங்கே தி.மு.க. மட்டும்தான் நமக்கு எதிரி. அவர்களுடன் நட்போ உறவோ, பிசினஸ் தொடர் போ, நம் ஆட்கள் யாரும் வச்சிக்கக் கூடாதுன்னு கறா ராகச் சொன்னா ராம். இந்தத் தக வல் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தரப் பையும், கூடவே பா.ஜ.க.வினரையும் ஒட்டுமொத்தமா அதிரவச்சிருக்கு.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அரசின் நில நிர்வாகத்துறை ஆணையரான நாகராஜன் ஐ.ஏ.எஸ்., பற்றி நாம் கடந்தமுறை பேசிய போது, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சினிமா தியேட்டர் லைசென்ஸ் விவகாரத்தை விசாரித்துவரும் அந்தத் துறையின் இணை ஆணையரான செந்தாமரை ஐ.ஏ.எஸ்.ஸிடம், அது குறித்து ரிப்போர்ட்டை வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகரிடம் தாக்கல் செய்யும்படி அவர் சொன்னதாகவும், அதற்காக முறைகேடாக ஒரு அரசாணை போடப்பட்டதாகவும், நமக்குக் கிடைத்த செய்தியைப் பகிர்ந்துக்கிட்டோம். ஆனால், கோட்டை அதிகாரிகளோ, அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில் நிலத்தில் அந்த தியேட்டர் இருந்ததால், அதன் லைசன்ஸ், அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜனால் ரத்து செய்யப்பட்டது என்றும், அது தொடர்பான மேல்முறை யீட்டுக் கோரிக்கையாக இருப்பதால், அதை, தானே விசாரிப்பது சரியில்லை என்று கருதியே, அதற்கான ரிப்போர்ட்டை வருவாய் நிர்வாக ஆணையரிடம் தாக்கல் செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், இந்த விசயத்தில் நாகராஜன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அவர் நேர்மையான அதிகாரி என்றும் தெரிவிக் கிறார்கள்.''’

__________

இறுதிச் சுற்று!

ff

மிழக அமைச்சரவையில் உதயநிதியை நியமிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கும் சூழலில், அவரது துறைக்கான செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிப்பதில் முதல்வர் ஸ்டாலின் சிலரை முடிவு செய்திருக்கிறார். ஆனால், துறையின் செயலாள ராக, குறிப்பிட்ட அந்த அதிகாரி நியமிக்கப்பட்டால் உதயநிதிக்கு எல்லாமுமாக மாறிவிடுவார் என முக்கிய அதிகாரிகள் யோசிக்கின்றனர். அதனால், அதை தடுப்பதற்கான சில முயற்சிகள் எடுக்கபடுகிறதாம். இதனையறிந்த முதல்வர் ஸ்டாலின், தனது முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனிடம் தலைமைச் செயலகத்தில் 11-ந்தேதி காலையில் விவாதித்திருக்கிறார். அந்த விவாதத்தில், "நான் பிறப்பிக்கும் சில உத்தரவுகள் கூட கிடப்பில் போடப்படுகிறது. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் சிலரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் மீது முரண்பட்டிருப்பதாக எனக்கு தகவல் வருகிறது" என்பது உட்பட பல விசயங்களைச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஒரு கட்டத்தில், "உங்களின் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். எந்த துறைக்கு என்னை மாற்றினாலும் எனக்கு மகிழ்ச்சிதான் சார்'' என்று உதயச்சந்திரன் சொல்ல, "அதெல்லாம் தேவையில்லை. வேலையைப் பாருங்கள்" என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் என கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.